உயிரியலுக்கான அறிமுகம் (Advanced Level Biology Unit 01)

உயிரியல் ஓர் விஞ்ஞானமாகும். இது உயிர்வாழும் அங்கிகளைப் பற்றிய கற்றலை மையப்படுத்தியதாகும். உயிரியல் என்பது (Bios - உயிர், logos - இயல்) ஆகும். 

உயிர் (life) எனும் எண்ணக்கருவைச் சுலபமாக வரையறுத்து விட முடியாது. விஞ்ஞானிகளால் உயிர் என்பதற்கான ஏற்றுக்கொள்ளத்தக்க வரைவிலக்கணம் ஒன்றினை இன்னும் வழங்க முடியாதுள்ளது. உயிரானது இரசாயனவியல், பௌதிகவியல் விதிகளைப் பயன்படுத்தி விளக்கிவிட முடியாததும் விசேடமானதும், தனித்துவமானதும் ஆகும். 

உயிரியல் என்ற பாடமானது மிகவும் சிக்கலானதும் விரிவானதுமாகும். இருந்தும் இலகுவாகக் கற்பதற்காக மூன்று முதலான கிளைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. விலங்கியல் (விலங்குகளைப் பற்றிக் கற்றல்) தாவரவியல் (தாவரங்களைப் பற்றிக் கற்றல்) மற்றும் நுண்ணங்கியியல் (நுண்ணங்கிகளைப் பற்றிக் கற்றல்).

உயிரியலின் முக்கியத்துவங்கள் பின்வருவன
  • உயிர் பல்வகைமையை விளங்கிக்கொள்ளல்.
  • மனித உடலையும் அதன் தொழிற்பாட்டையும் விளங்கிக்கொள்ளல்.
  • இயற்கைவளங்கள், சுற்றாடல் என்பவற்றின் நீடித்து நிலைபெறும் பயன்பாடு, முகாமைத்துவம்.
  • நீடித்து நிலைபெறும் உணவு உற்பத்தி.
  • தாவர வாழ்கையை விளங்கிக்கொள்ளல்.
  • நோய்கள் அவற்றுக்கான காரணங்களை அறிய உதவும்.
  • சில சட்ட, ஒழுங்குநெறி சிக்களை தீர்த்தல் .
  • உயிருளகின் தன்மை, ஒழுங்கமைப்பு கோலங்களை அறிய.
  • அங்கிகளின் சிறப்பியள்புகள்
  • தலைமுறையுரிமையும் கூர்ப்பும்.
  • அங்கிகளின் ஆட்ச்சி நிறை ஒழுங்கு மட்டங்கள்.
உயிர் பல்வகைமையை விளங்கிக்கொள்ளல்

புவி இன்று தற்போது அதிகளவு பல்வகைமையைக் கொண்டுள்ளது. உயிர் ஏறத்தாழ 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியது.

அங்கிகள் பிறபோசணைக்குரிய, காற்றின்றி வாழும் புரோக்கரியோற்றாக்களாகும். தொடர்ந்து நடைபெற்ற கூர்ப்புச் செயற்பாட்டின் விளைவாக விரிவான உயிர்ப்பல்வகைமை ஒன்று உயிர்க்கோளத்தில் தற்போது நிலவுகிறது. விஞ்ஞானிகள் தமது கற்கையை அடிப்படையாகக் கொண்டு 10 முதல் 100 மில்லியனுக்கு மேலான இனங்கள் உலகில் காணப்படுவதாக அனுமானிக்கின்றனர். 

உயிருள்ள உலகிற்கும் உயிரற்ற உலகிற்கும் இடையே ஒரு சக்தி வாய்ந்த தொடர்பு இருக்கிறது. உயிர்க்கோளத்தின் நிலவுகைக்காக ஒவ்வொரு அங்கியும் சூழலில் தனித்துவமான ஒரு வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றது.

பூமியிலுள்ள பல்வேறு வகையான அங்கிகள், தாவர, விலங்கு மற்றும் நுண்ணங்கி இனங்களின் எண்ணிக்கை, இவ்வினங்களின் பரம்பரையலகுப் பல்வகைமை, பூமியில் உள்ள பல்வேறு சூழற்றொகுதிகளான பாலைவனங்கள், மழைக்காடுகள் மற்றும் பவளப்பாறைகள் அனைத்துமே உயிரியல் ரீதியாகப் பல்வகைமை கொண்ட புவியின் பகுதியாகும்.

மனித உடலையும் அதன் தொழிற்பாட்டையும் விளங்கிக்கொள்ளல்.

கற்கின்றபோது (விசேடமாக மனித உடலின் இழையவியல் உடலமைப்பியல் போன்றவை) அங்கங்களின் கட்டமைப்புத் தொடர்பான அறிவினைப் பெற்றுக் கொள்ள முடியும். இதன் விளைவாக மனித உடலின் ஒழுங்கமைப்பு, வெவ்வேறு அங்கத்தொகுதிகளின் தொழிற்பாடுகள், கட்டமைப்புக்கும் அவற்றின் தொழிலுக்கும் இடையிலான தொடர்பு என்பவற்றை விளங்கிக் கொள்வதுடன் அவற்றை மெச்சக்கூடியதாகவும் உள்ளது.

இயற்கைவளங்கள், சுற்றாடல் என்பவற்றின் நீடித்து நிலைபெறும் பயன்பாடு, முகாமைத்துவம்.